June 4, 2017

பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் பாகம்-1

குழாய்கள் வழியே நகரங்களில் நீர் தருதல் திட்டம் (DAM AND PIPELINE)


தமிழன் கண்ட தொழில்நுட்பம் தான் வேறொரு பெயர் மூலம் இன்று நம்மில் உலா வருகிறது.

நீர்தேக்கத்தை எங்கு கட்ட வேண்டும் என புலவர் ஒருவர் தம் மன்னனுக்கு கூறுகிறார் கீழே கவனிக்க.

மதுரையில் தண்ணீர் பஞ்சம் வரபோகிறது என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்துகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

அவன் அவையில் உள்ள புலவர் குடபுலவியனார் தன் மன்னனுக்கு, நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்றும் அதை எங்கு கட்ட வேண்டும் என ஆலோசனை பின்வருமாறு கூறுகிறார்.



நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருக
            ( --- புறநானூறு 18:28)

அதாவது நிலத்தை தோண்டாது (நிலன்நெளி)நிலம் குழிந்த பள்ளத்தாக்கில் நீர்தேக்கம் அமைத்தால் மழைநீர் எளிதில் ஓடிவந்து தேங்கும்.

அங்கு அதை சுற்றி கட்டுமானம் எழுப்பினால் நீர்நிலை பெருகும் என்று கூறுகிறார்.

அவ்வாறு தேக்கிய நீரை நகர மக்களுக்கு கொண்டு செல்வது குறித்து மற்றொரு புலவர் கூறுகிறார்.

மன்னா! அவ்வாறு தேக்கிய நீரை நம்மவர்கள் இதற்கு முன் சுருங்கை(PIPELINE) மூலம் கொண்டு சென்றனர்





இதோ பாருங்கள் ஆதாரம் என காட்டுகிறார் புலவர்

நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து
கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது

    ( -- பரிபாடல், 20: 104-107)

அதாவது பெரிய மாளிகைகள் உடையது கூடல் மாநகர்( மதுரை) நகரின் தெருவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுருங்கை (UNDERGROUND PIPELINE) வழி நீர் ஓடியது. மதில்களின் கீழ் அமைந்த சுருங்கையிலிருந்து(PIPELINE) இந்நீர் விழும்பொழுது அது யானை தன் துதிக்கையை தூக்கி நீரை சொரிவது போல் இருக்கும் என சங்க புலவர் கூறுகிறார்.

ஆகையால் நாமும் அவ்வாறு தேக்கிய நீரை மக்களுக்கு கொடுப்போம் என்றார் மற்றொரு புலவர்.

நல்ல அறிவுரை நல்ல பாடல் அவ்வாறே செய்வோம் என்றான் மன்னன்.

இப்போது அணை அமைப்பதும் நிலத்தடியில் குழாய்கள்(UNDERGROUND PIPELINE) மூலம் நீர் கொண்டு செல்வதும் பண்டைய தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பமே தவிர ஆங்கிலேயர் கண்டுபிடித்தது அல்ல

உங்கள் சித்தர் அடிமை
இரா.சங்கர்
ஈரோடு

வாழ்க தமிழ்; வளர்க நம் கலைகள்

No comments: